அதிகளவில் உரம் விற்பனை செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பரிசு


அதிகளவில் உரம் விற்பனை செய்த    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அதிகளவில் உரம் விற்பனை செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021-22-ம் ஆண்டில் அனைத்து உரங்களும் அதிகளவில் விற்பனை செய்த முதல் 3 சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மீனா அருள் கலந்துகொண்டு 964.980 டன் உரம் விற்பனை செய்த ஜி.அரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு முதல் பரிசு வழங்கினார். மேலும் இச்சங்கம் மாநில அளவில் அதிக உரங்கள் விற்பனை செய்ததற்கு முதல் பரிசையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 683.915 டன்கள் உரம் விற்பனை செய்த கே.ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 2-வது பரிசும், 628.355 டன் உரம் விற்பனை செய்த களமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணம் செலுத்தி உரங்களை பெற்றுக்கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் மீனா அருள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின்போது திருக்கோவிலூர் சரக துணைப்பதிவாளர் கீர்த்தனா, டான்பெட் விழுப்புரம் மண்டல மேலாளர் செந்தில்ராம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.


Next Story