10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த வீரபாண்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு


10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த  வீரபாண்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு
x

வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளருமான வீரபாண்டி நடராஜன் தலைமை தாங்கி 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர் அஜய்க்கும், 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி கிருத்திகாவுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி பாராட்டியதோடு, 10-ம் வகுப்பு தேர்வில் 93 சதவீத தேர்ச்சி பெற்றதற்கும், 12-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீத தேர்ச்சி பெற காரணமான பள்ளி ஆசிரியர்களையும் வாழ்த்தினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரேவதிபெருமாள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜசேகர், பெற்றோர்-ஆசிரியர் கழக பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை அமைப்பாளர் சக்திசிவம், கிளை அவைத்தலைவர் வீரபத்திரன், ராமமூர்த்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராமலிங்கம் நன்றி கூறினார்.


Next Story