மலை கிராமங்களை இணைக்க ரூ.3 கோடியில் புதிய சாலைகள் கிரி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
தண்டராம்பட்டு பகுதியில் மலை கிராமங்களை இணைக்க ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை மு.பெ.கிரி எம்/எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு பகுதியில் மலை கிராமங்களை இணைக்க ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை மு.பெ.கிரி எம்/எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி போட்டி மலை பகுதியில் பல்வேறு கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். கல்வராயன் மலைத் தொடரை ஒட்டி உள்ள இந்த மலை கிராமங்களுக்கு சாலை போக்குவரத்து இல்லாமல் இருந்து வருகிறது இவை செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.
இங்கு வாழும் மலைவாழ் மக்கள் அவசர தேவைகளுக்கு கூட மோட்டார் சைக்கிளில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் வர இயலாத நிலை உள்ளது. இதனால் பிரசவம் விஷக்கடி விபத்து போன்ற அவசர மருத்துவ தேவைகளுக்கு உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்க முடியாத நிலை இந்த பழங்குடி மக்களுக்கு இருந்து வருகிறது.
செக்கடி என்ற இடத்தில் இருந்து மேல் வலசை, கீழ் வலசை ஆகிய மலை கிராமங்களை இணைக்கும் போது மலை கிராம மக்கள் தானிப்பாடி வரை வந்து செல்ல சுலபமாக இருக்கும். எனவே மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பழங்குடி மக்களின் நலன் கருதி ரூ.3 கோடி செலவில் இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று செங்கம் மு.பெ. கிரி எம்.எல்.ஏ தானிப்பாடியில் இருந்து அதிகாரிகளுடன் மோட்டார் சைக்கிள் மூலம் உள் செக்குடி மலை கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம், கோ.ரமேஷ் பெ.கோவிந்தன் தண்டாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, தி.மு.க.மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன். தனுசு, விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெ.மெய்கண்டன் மற்றும் மாவட்ட பிரதிநிதி ஏசுதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.