பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: சைக்கிள் பயணம் செல்லும் வீராங்கனைக்கு பாராட்டு
தர்மபுரி
தர்மபுரி:
மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஷா மால்வியா. மலையேற்றத்தில் தேசிய அளவில் சாதனை புரிந்த வீரங்கனையான இவர், பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக 7-வது மாநிலமாக தமிழகம் வந்த அவர் பல்வேறு மாவட்டங்களின் வழியாக நேற்று தர்மபுரி வந்தார். சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீராங்கனையின் சேவை, சாதனைகளை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story