பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி


பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

ஆண்டுதோறும் ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி ஊரகம் மற்றும் ஊரக மகளிர் போலீஸ் நிலையம் சார்பில், பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி எம்.பாலடாவில் நேற்று நடைபெற்றது. அங்கிருந்து பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பரண்டு விஜயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்து கூறுகையில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் பள்ளி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

சமூக நலன் மகளிர் உரிமைகள் துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா பெண் குழந்தைகளுக்கு தலையில் மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான கையெழுத்து இயக்கத்தை ஆர்.டி.ஓ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோமதி, துணை தாசில்தார் சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பாளர் பார்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story