பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் பூம்புகார் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வானகிரி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை தொடர்ந்து மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள், கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story