சிறுமி விஷம் குடித்து தற்கொலை


சிறுமி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டத்தில் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

வாலிபருடன் பழக்கம்

மார்த்தாண்டம் அருகே உள்ள கழுவன்திட்டை காலனியை சேர்ந்தவர் ரதீஷ்குமார். இவரது மனைவி ஸ்ரீசுமா (வயது34). இவர்களுக்கு அக்சயா (16) உள்பட 2 மகள்கள் உண்டு. ரதீஷ்குமார் மனைவி, மகள்களை விட்டு பிரிந்து சென்றார். அதன்பின்பு ஸ்ரீசுமா மகள்களுடன் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் 2-வது மகளான அக்சயா 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு செண்டை மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். அப்போது சுங்கான்கடையை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.

விஷம் குடித்து வாந்தி

இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் அக்சயாவுக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் உள்ள அக்சயாவின் வீட்டிற்கு வந்து கோவிலுக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு அக்சயா மறுப்பு தெரிவித்தார். அதனால் அந்த வாலிபர் திரும்பி சென்றார். அவர் சென்றபின்பு அந்த வாலிபரை செல்போனில் தொடர்பு கொண்டு தானும் கோவிலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அக்சயா வீட்டில் உள்ள தனது அறைக்குள் சென்றார். சிறிது நேரம் கடந்து அறைக்குள் அக்சயா வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது அக்‌சயா விஷம் குடித்த நிலையில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.

போலீசார் விசாரணை

உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அக்சயா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி வருகிறார். 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story