பெற்றோர் திட்டியதால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை


பெற்றோர் திட்டியதால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை
x

வெள்ளியணை அருகே பெற்றோர் திட்டியதால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

15 வயது சிறுமி

கரூர் மாவட்டம், போத்துராவுத்தன்பட்டி அருகே உள்ள அக்கரக்கான்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தற்போது வெள்ளியணை அருகே உள்ள குள்ளம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகள் கோகிலா (வயது 15). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த கோகிலா பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கோகிலாவின் பெற்றோர் பள்ளிக்கு செல்லாமலும், வீட்டில் ஒரு வேலையும் செய்யாமலும் இருப்பதை கண்டித்து அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோகிலா முருங்கை செடிக்கு அடிக்கும் விஷ மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story