இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இலுப்பூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
இலுப்பூர் சமாதானபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (வயது 25). இவர்களுக்கு நித்தியஸ்ரீ (6), தர்சாஸ்ரீ (4) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் அடிக்கடி வெளியூர் சென்று வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கவுசல்யா வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவுசல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story