இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. தொழிலாளி. இவருடைய மனைவி ஜாஸ்மின் (வயது 22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. சாகுல் அமீதுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ஜாஸ்மின் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சாகுல் அமீது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜாஸ்மின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story