தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
பழனியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல்
பழனி அடிவாரம் மதனபுரத்தை சேர்ந்த உதயகுமார் மனைவி நந்தினி (வயது 20). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. உதயகுமார் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நந்தினி தனது பெற்றோருடன் மதனபுரத்தில் வசித்து வந்தார். நந்தினி செல்போனில் வெகுநேரம் பேசியதாகவும், அதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நந்தினி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்த அடிவாரம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story