தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி மாலதி(வயது 20). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாலதியை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் மாலதியின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story