இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கணவர் 2-வது திருமணம் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த முதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் குங்குலியர் தெருவை சேர்ந்தவர் கன்ராயன் என்கிற சந்தோஷ் (வயது 25). இவர், அதே பகுதியை ேசர்ந்த பரமேஸ்வரி (20) என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 6 மாதத்தில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கன்ராயன், செய்யாறு தாலுகா பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் கன்ராயனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் விரக்தியில் இருந்த பரமேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு வழக்குப்பதிவு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட பரமேஸ்வரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story