காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் பழைய காலனியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகள் உதயா (வயது21). இவர் மதுரை பைபாஸ் சாலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும், கடந்த ஜனவரி 13-ந்தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையே, உதயா கர்ப்பமானதால், கணவருடன் வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கணவர் பிரித்விராஜ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தநிலையில் வழக்கம்போல பணிக்குச் சென்று விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் இரவு வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பக்கத்து வீட்டினர் கதவைத் தட்டியுள்ளனர். இருப்பினும், கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று கதவை உடைத்து உள்ளே சென்றபோது, வீட்டின் அறையில் உதயா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உதயாவின் தாயார் வனிதா (40) அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உதயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.