இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாலுசாமி (வயது 35). இவருக்கும் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள வாளரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி மகள் சினேகாவுக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. பாலுசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சினேகாவின் தந்தை நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story