தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி மருதுபாண்டியர் கிழக்குதெருவை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 31). இவருக்கும் மாரி (29) என்பவருக்கும் கடந்த 2017-ல் கோவையில் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் இருந்து சிவகாசி வந்த புவனேஷ்வரன் குடும்பத்தினர் மருதுபாண்டியர் கிழக்குதெருவில் வசித்து வந்தனர். புவனேஷ்வரன் அதே பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் புவனேஷ்வரன் வீட்டிற்கு செல்லும் போது குடித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று குடும்ப செலவுக்கு மாரி பணம் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை, லாரி செட்டில் வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு புவனேஷ்வரன் லாரி செட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்து மீண்டும் தகராறு செய்த மாரி, குழந்தைகளை கணவனிடம் விட்டு, விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து புவனேஷ்வரன் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது அங்கு மாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து புவனேஷ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.