பட்டாசு வெடித்து பெண் சாவு
ஊத்தங்கரை:-
ஊத்தங்கரை அருகே பட்டாசு வெடித்து பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
ஊத்தங்கரை தாலுகா எக்கூர் காந்திநகரை சேர்ந்த விவசாயி வரதராஜ். இவருடைய மனைவி மனைவி குமுதா (வயது 37). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தனர்.
குமுதாவின் குழந்தைகள் வீட்டில் இருந்த பட்டாசுகளை வெடித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த குமுதா மீது பட்டாசு விழுந்தது.
ஆஸ்பத்திரியில் சாவு
அங்கு இருந்த மற்ற பட்டாசுகளும் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் குமுதா பலத்த காயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குமுதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குமுதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.