சிறுமி கடத்தல்; முதியவர் கைது


சிறுமி கடத்தல்; முதியவர் கைது
x

சிறுமியை கடத்திய; முதியவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

தேவதானப்பட்டி அருகில் உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 29). இவரது கணவர் வாசிமலை இறந்துவிட்டார். இவர்களது 8 வயது மகள் கெங்குவார்பட்டியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

பரமேஸ்வரி வீடு கட்டுவதற்காக விருதுநகரை சேர்ந்த உறவினர் பெரியசாமியிடம் (வயது 60) ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பெரியசாமி பரமேஸ்வரியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதை பரமேஸ்வரி கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெரியசாமி கடந்த 26-ந்தேதி பரமேஸ்வரியின் 8 வயது மகளை கடத்தி சென்றுவிட்டார். மேலும் அவர் பரமேஸ்வரிக்கு போன் செய்து தான் கூறும் இடத்திற்கு வரவேண்டும் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து பரமேஸ்வரி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் பெரியசாமி தேனி அரண்மனை புதூரில் இருந்து பரமேஸ்வரிக்கு போன் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சிறுமியை மீட்டனர். மேலும் பெரியசாமி கைது செய்யப்பட்டார்.


Next Story