சிறுமி பலாத்கார வழக்கில்தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்:தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி பலாத்கார வழக்கில்தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்:தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு தீர்ப்புகூறப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள மேலபூவாணியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2.9.2020 அன்று அப்போதைய இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

20 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், அரசு வக்கீல் முத்துலட்சுமி மற்றும் போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.


Next Story