சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை மணக்கோலத்தில் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை மணக்கோலத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருமணம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சென்னியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 21). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் அகரகீரங்குடி கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் திருமணம் நடப்பதாக குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில் குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் மணிமொழி மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மோகன்தாஸ் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து இருந்தார்.
கைது
விசாரணையில் 17 வயது சிறுமியை மோகன்தாஸ் திருமணம் செய்து கொண்டதும், மேலும் அந்த சிறுமியை மோகன்தாஸ் கர்ப்பமாக்கியதும் தெரியவந்தது.இது குறித்து குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் மணிமொழி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாசை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மணக்கோலத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.