மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு


மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 30 பேர் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தை பார்வையிட்டனர். அப்போது போலீசார், போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டால் அதற்கான தீர்வு குறித்து மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் பள்ளி ஆசிரியைகள், போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story