காதலனின் தற்கொலையை அறிந்த காதலி தூக்குப்போட்டு தற்கொலை


காதலனின் தற்கொலையை அறிந்த காதலி தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் காதலன் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த காதலி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் காதலன் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த காதலி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி பெண்

திருச்சி, கே.கே. நகர் அருகே உள்ள கே. சாத்தனூர், களத்து வீடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ஜோதிமணி (வயது 29). முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது திருமணத்துக்கு பெற்றோர் வரன் தேடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை ஜோதிமணி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் இவரை விட வயது குறைவு என்பதாலும், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவரை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்கவில்லையாம்.

தற்கொலை

இதனால் அந்த வாலிபர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் நேற்று தான் ஜோதிமணிக்கு தெரியவந்தது. காதலனின் மரணத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார். இதனையடுத்து அவர் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்மதிக்காததால் காதலர்கள் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கே.சாத்தனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story