நெல்லையில் வீடுகளில் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினீயர் கைது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்


நெல்லையில் வீடுகளில் புகுந்து    பெண்கள் குளிப்பதை செல்போனில்  வீடியோ எடுத்த என்ஜினீயர் கைது  பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்
x

நெல்லையில் வீடுகளில் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லையில் வீடுகளில் புகுந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

நோட்டமிட்ட வாலிபர்

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில நாட்களாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடைபயிற்சி சென்று வந்தார்.

ஆனால், அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பதால் அங்கு வழக்கமாக நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் அவரை கண்காணித்து வந்தனர். மேலும், அந்த வாலிபர் அங்குள்ள வீடுகளில் ஆண்கள் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளார்.

செல்போனில் வீடியோ எடுத்தார்

நேற்று முன்தினம் அந்த வாலிபர், ஒரு வீட்டில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து புகுந்தார். அங்கு ஒரு பெண் குளித்துக்கொண்டு இருந்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சத்தம் போட்டனர். இதனால் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார். உடனே, அந்த பகுதி பொதுமக்கள் அவரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அந்த வாலிருக்கு தர்ம அடி கொடுத்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள்.

அந்த வாலிபரை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் நயினார் ஆகியோர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

என்ஜினீயர்

அப்போது, பல்வேறு தகவல்கள் வெளியானது.

அதாவது, பிடிபட்ட அந்த வாலிபர் பாளையங்கோட்டை ராஜேந்திரநகர் 8-வது தெருவைச் சேர்ந்த பால் ராபின்சன் (வயது 35) என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா காலத்தில் அங்கிருந்து நெல்லை வந்த பால் ராபின்சன் அதன் பிறகு வேலைக்கு செல்லவில்லை. கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்கு சென்ற பால் ராபின்சன் பகல் நேரங்களில் தெருத்தெருவாக சென்று அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா?, நாய்கள் இருக்கிறதா? என்பதை நோட்டமிட்டு வந்துள்ளார்.

நிர்வாண வீடியோக்கள்

மதியம், இரவு நேரங்களில் ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கிருக்கும் குளியல் மற்றும் கழிப்பறைகளில் ஜன்னல் வழியாக செல்போனில் பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.

பால் ராபின்சன் செல்போனை போலீசார் வாங்கி பார்த்ததில் அதில் ஏராளமான பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், கழிப்பறைக்கு செல்லும் வீடியோக்கள், பெண்களின் நிர்வாண வீடியோக்கள் இருந்தன. இந்த வீடியோ குறித்து பால் ராபின்சனிடம் போலீசார் கேட்ட போது, இந்த வீடியோக்களை வீட்டில் யாரும் இல்லாதபோது தனியாக பார்த்து ரசிப்பதற்கு எடுத்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பால் ராபின்சனை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

கைதான பால் ராபின்சனுக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது மனைவி அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story