பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு விடுதியில் இடம் கிடைக்காததால் வேதனை


பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு விடுதியில் இடம் கிடைக்காததால் வேதனை
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் வெளி மாவட்ட மாணவிகளுக்கு அரசு விடுதியில் இடம் கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளனர்.

மாணவிகள்

பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனப்பள்ளியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், கிருஷ்ணகிரி மட்டுமின்றி திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவிகளும் படித்து வருகிறார்கள்.

இந்த கல்லூரியில் படிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் சிலருக்கு, அரசு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டில் தங்களது கல்வியை கைவிடும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று 30-க்கும் மேற்பட்ட மாணவிகள், தங்களது பெற்றோருடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது:-

கூடுதல் இடவசதி

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதுநாடு, திருவண்ணாமலை மாவட்டம் பீமாரப்பட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர், பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு அரசு விடுதியில் தங்கி படிக்க இடம் கிடைக்கவில்லை.

விடுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. தற்போது மாணவிகள் தினமும் வீட்டில் இருந்து கல்லூரி வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, விடுதியில் கூடுதலாக மாணவிகள் தங்க தேவையான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இல்லாவிட்டால், இந்த ஆண்டில் மாணவிகள் கல்வியை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story