ஓசூரில்ரூ.3.69 கோடியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டிடம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


ஓசூரில்ரூ.3.69 கோடியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டிடம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
கிருஷ்ணகிரி

மத்திகிரி

ஓசூரில் ரூ.3 கோடியே 69 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மாணவிகள் விடுதி

ஓசூரில் ரூ.3 கோடியே 69 லட்சத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். இதையொட்டி ஓசூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட கலெக்டர் சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். தொடர்ந்்து மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி உணவு பரிமாறினார்கள்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகள் மற்றும் 11 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 46 விடுதிகள் இயங்கி வருகிறது. ஒசூர் தாலுகாவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி 100 மாணவிகள் எண்ணிக்கையுடன் 2.3.2014 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு தற்போது ரூ.3 கோடியே 69 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கட்டிடம்

இந்த விடுதியில் 100 மாணவிகள் தங்கும் அளவிற்கு 3 தளங்களில் 30 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, குளிரூட்டும் பெட்டி, கிச்சன் சிம்னி, நவீன மாவரைக்கும் எந்திரம், மிக்சி, சமையல் எந்திரங்கள், சமையல் எரிவாயு உபகரணங்கள், உணவருந்தும் மேசை, கம்ப்யூட்டர் மேசை போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த விடுதி ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட மலைகிராம மாணவிகள் தங்கி கல்வி பயில நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. எனவே, மாணவிகள் நன்கு கல்வி கற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா, மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாமிநாதன், உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், உதவி பொறியாளர்கள் ஜெசிந்தா பவளமல்லி, சேகரன், தாசில்தார் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story