கைப்பந்து போட்டியில் காட்டுக்காநல்லூர் பள்ளி மாணவிகள் முதலிடம்


கைப்பந்து போட்டியில் காட்டுக்காநல்லூர் பள்ளி மாணவிகள் முதலிடம்
x

வட்டார அளவிலான கைப்பந்து போட்டியில் காட்டுக்காநல்லூர் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் ஊராட்சி ஆறுமுகம் நிதியுதவி நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் ஆரணி கோட்டை மைதானத்தில் ஆரணி வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இதில் 14 வயதுக்குட்பட்டோர் கைப்பந்து போட்டியில் இந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆர்.பிரேம்குமார், ஆகியோரை மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் ஆர்.அருணகிரி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.


Next Story