ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்


ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்
x

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று, மீன்பிடி தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;


மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று, மீன்பிடி தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து மீன்பிடி தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தடைக்கால நிவாரணம்

மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ள நிலையில் இதுவரை மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.எனவே, தமிழக அரசு, மீன்வளத்துறை உடனடியாக மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்ட நிவாரணம் ரூ 6 ஆயிரம் என்பது, தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மீனவர்களுக்கு போதுமானதாக இல்லை.

ரூ.20 ஆயிரம்

எனவே, தடைக்கால நிவாரணத்தை ரூ 20 ஆயிரமாக உயர்த்தி, தாமதமின்றி வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் மீனவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் மீன்வளத்துறை அதிகாாிகளுக்கு கோாிக்கை மனு அனுப்பி உள்ளனர்.


Next Story