மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்


மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்
x

சிறு வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று வணிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசத்தில் வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில், சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும். அரிசி, கோதுமை, ரவா, தயிர் போன்றவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும். வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். சிறு வியாபார நிறுவனங்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை தமிழக அரசு கைவிட வேண்டும். சிறு வணிகர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். பாபநாசம் தாலுகா அலுவலகம் வரை மினி பஸ்களை இயக்க வேண்டும். பாபநாசம் பகுதியில் கழிவு நீர் வடிகால் தேங்கி வருவதை உடனடியாக பேரூராட்சி சீரமைக்க வேண்டும். பாபநாசம் ெரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விரைவு ெரயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் செயற்குழு உறுப்பினர் அசோகன் நன்றி கூறினார்.


Next Story