ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா


ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
x

நெல்லையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா நேற்று நெல்லையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை, மாநில செயலாளர்கள் சிந்தா சுப்பிரமணியம், ஏ.பி.சரவணன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணை தலைவர் சி.டி.ரமேஷ் செல்வன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகநாதராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நெல்லையப்பர் கோவிலில் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக கட்சி அலுவலகம், வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்பட 7 இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story