தூத்துக்குடிக்கு ஜி.கே.வாசன் வருகை
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 50-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் எஸ்.டி.ஆர் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு 50 அடி நீள கேக் வெட்டி அனைவருக்கும் வழங்குகிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தி பேசுகிறார். விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ்.டி.ஆர்.பொன்சீலன் தலைமையில் குடும்பத்தினர் மற்றும் எஸ்.டி.ஆர்.நிறுவனங்களின் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story