அரசு பள்ளியில் கண்ணாடிகள் உடைப்பு


அரசு பள்ளியில் கண்ணாடிகள் உடைப்பு
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளியில் உள்ள புதிய கட்டிடத்தில் சுமார் 6 வகுப்பறைகளில் தொடுதிரை உடன் கூடிய வகுப்பறையில் உள்ள கண்ணாடி ஜன்னல்களில் கற்கள் வீசி உடைக்கப்பட்டுள்ளது. பள்ளி செயலர் அறையில் உள்ள கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த கணினி உடைந்த நிலையில் உள்ளது. இங்குதான் கணினி மற்றும் பள்ளியின் முக்கிய ஆவணங்களும் உள்ளது. இச்சம்பவம் குறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் திருட முயற்சி நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.



Next Story