புனித ஆரோக்கிய அன்னை கெபி கண்ணாடி உடைப்பு


புனித ஆரோக்கிய அன்னை கெபி கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனித ஆரோக்கிய அன்னை கெபி கண்ணாடி உடைக்கப்பட்டது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிச்சியூரணி விலக்கு ரோட்டில் புனித ஆரோக்கிய அன்னையின் கெபி அமைந்துள்ளது. இந்த கெபியின் முகப்பில் அமைந்துள்ள கண்ணாடியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே உள்ள மாதா சிலையை சேதப்படுத்தியுள்ளனர். வெளியில் அமைந்துள்ள உண்டியலின் பூட்டையும் உடைத்துள்ளனர். ஆனால் உண்டியல் இரும்பால் செய்யப்பட்டுள்ளதால் அதை உடைக்க முடியாமல் மர்ம நபர்கள் சென்று விட்டனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story