அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்ணாடிகள் உடைப்பு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அறந்தாங்கியை சேர்ந்த வாலிபர் செந்தில்குமார் என்பவர் திடீரென மருத்துவமனை முகப்பு கண்ணாடி மற்றும் புறநோயாளிகள் சீட்டு கொடுக்கும் இட கண்ணாடி ஆகிய 2 கண்ணாடிகளை திடீரென உடைத்தார். மேலும் அவருக்கு கண்ணாடியை கைகளால் உடைத்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அவர் திடீர் ரகளையில் ஈடுபடுவது போன்று செயல்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story