முத்துராமலிங்க தேவர் பீடத்தில் கண்ணாடி உடைப்பு


முத்துராமலிங்க தேவர் பீடத்தில் கண்ணாடி உடைப்பு
x

பேட்டை அருகே முத்துராமலிங்க தேவர் பீடத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணி கரிசல்குளம் பஸ் நிறுத்தம் அருகில் பீடம் ஒன்று உள்ளது. அதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பூலித்தேவன் ஆகியோரின் உருவப்படங்களும், ஒரு அடி உயரத்துக்கு தேவர் சிலையும் இருந்தன. அந்த படங்களுக்கு முன்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கதவு உள்ளது. நேற்று முன்தினம் இரவு கதவு கண்ணாடியையும், முத்துராமலிங்க தேவர், பூலித்தேவன் படங்களின் கண்ணாடியையும் மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தேவர் சிலையையும் உடைத்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நெல்லை ேபாலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் விஜயகுமார், பேட்டை இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story