குளோபல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா


குளோபல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே இடைகால் குளோபல் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே இடைகால் குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயினிலா சுந்தரி தலைமை தாங்கினார். தென்காசி- நெல்லை சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் மோனிகா கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியை ஆஷா வரவேற்றார். பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் அசோக் மற்றும் ராபின்ஸ்டன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தனர். கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி சார்பாக தாளாளர் ஷேக் உதுமான் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவித்தார். ஆசிரியை பவானி நன்றி கூறினார். வருகின்ற கல்வியாண்டில் 11-ம் வகுப்பு தொடங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.


Next Story