'பிங்க்' நிறத்தில் ஜொலிக்கும் வேலூர் கலெக்டர் அலுவலகம்
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ‘பிங்க்' நிறத்தில் வேலூர் கலெக்டர் அலுவலகம் ஜொலித்தது.
மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 'பிங்க்' நிறத்தில் வேலூர் கலெக்டர் அலுவலகம் ஜொலித்தது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களை மின்விளக்குகளால் இரவு நேரத்தில் ஒளிர ஏற்பாடு செய்யும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு, அரசு உத்தரவிட்டது.
அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகம் மின்விளக்குகளால் நேற்று இரவு ஒளிரவிடப்பட்டது. 'பிங்க்' நிறத்தில் ஜொலித்த கலெக்டர் அலுவலகத்தை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து சென்றனர். பெரும்பாலானோர் வண்ண விளக்குகளால் கலெக்டர் அலுவலகம் ஜொலிப்பதற்கான காரணத்தை யோசித்தபடி கடந்து போனார்கள். கலெக்டர் அலுவலகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட பலர் தங்களின் செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தனர்.
அதேபோன்று அந்த வழியாக சென்ற பொதுமக்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டுமே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.