பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்


பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
x

எட்டயபுரத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் உட்கோட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு காவல்துறை சார்பில், ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. விளாத்திகுளம் உட்கோட்ட பகுதிகளான எட்டயபுரம், மாசார்பட்டி, கோடங்கிபட்டி மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் அறிவுறுத்தலின்படி, பக்தர்களின் மீது போலீசார் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டினார்கள். மேலும் சாலையோரங்களில் கவனமாக செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story