குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம்
தேத்தாகுடி குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வேதாரண்யம்:
தேத்தாகுடி குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குளுந்தாளம்மன் கோவில்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி குளுந்தாளம்மன், முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. . பின்னா் அம்மன் வீதிஉலா, அக்கினி கப்பரை உள்ளிட்டநிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேத்தாகுடி, தேவதாகுடி கிராம மக்கள் செய்திருந்தனர். இதையடுத்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது