1 கிலோ மீட்டர் தூரம் சென்று தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்கும் நிலை

1 கிலோ மீட்டர் தூரம் சென்று தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்கும் நிலை
x

திருச்சுழி அருகே குடிநீர் குழாய்கள் பழுதானதால் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி அருகே குடிநீர் குழாய்கள் பழுதானதால் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குடிநீர் குழாய்

திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், பண்ணை மூன்றடைப்பு ஊராட்சியை சேர்ந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் பழுதானதால் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரவில்லை. ஆதலால் இந்த பகுதி மக்கள் ஊருக்கு சற்று தொலைவில் ஊருணி கரை அருகே உள்ள குழாயில் குடிதண்ணீைர தள்ளு வண்டிகளில் வைத்து எடுத்து வருகின்றனர்.

தள்ளுவண்டி

இரவு நேரங்களில் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுக்க பெண்கள் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

எங்கள் ஊருக்குள் உள்ள குழாய்களில் இருந்து தற்போது தண்ணீர் வரவில்லை. ஆதலால் தள்ளுவண்டியில் குடத்தை வைத்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருணியின் கரை அருகே உள்ள குழாயில் தண்ணீர் எடுத்து வருகிறோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊருக்குள் உள்ள குழாய்களில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story