சுதந்திர தின விழாவுக்கு சென்று திரும்பிய கல்லூரி மாணவர் பலி

சுதந்திர தின விழாவுக்கு சென்று திரும்பிய கல்லூரி மாணவர் பலி
x

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சுதந்திர தின விழாவுக்கு சென்று திரும்பிய கல்லூரி மாணவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர்

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சுதந்திர தின விழாவுக்கு சென்று திரும்பிய கல்லூரி மாணவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

சுதந்திர தின விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி விளாம்பட்டி ரோட்டில் வசிப்பவர் ராஜ் (வயது 48). இவரது மகன் தினேஷ் (18). இவர் மேலாமத்தூர் பஞ்சாயத்தில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக் பிரிவில் படித்து வந்தார்.

நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் பிரதீப்புடன் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது உப்போடை பாலம் அருகே வந்து கொண்டிருந்தார்.

மாணவர் பலி

அப்போது எதிரே திருத்தங்கல்லை சேர்ந்த கார்மேக கண்ணன் வந்த மோட்டார் சைக்கிள் தினேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தினேஷ், பிரதீப் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் கார்மேக கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story