கோவில்பட்டியில் மாட்டு வண்டியில் சென்றுத.மா.கா.வினர் போராட்டம்


கோவில்பட்டியில் மாட்டு வண்டியில் சென்றுத.மா.கா.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாட்டு வண்டியில் சென்று த.மா.கா.வினர் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையத்திற்கு 24 மணி நேரமும் அரசு சர்குலர் பஸ் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 10 மணி அளவில் த.மா.கா. நகர தலைவர் கே. பி. ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரட்டை மாட்டு வண்டியில் பயணிகளை கூடுதல் பஸ் நிலையத்திற்கு ஏற்றிச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட அண்ணா பஸ் நிலையம் நோக்கி வந்தனர்.

இவர்களை ஏ. கே. எஸ்.தியேட்டர் ரோடு சந்திப்பில் தடுத்து நிறுத்தி மாட்டுவண்டியில் வந்த 6 த.மா.கா.வினரை மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், செந்தில்குமார், அர்ஜூனன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story