இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Jan 2024 6:53 PM IST (Updated: 19 Jan 2024 7:06 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே முதல் முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன என்று மு.க ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் துவக்க விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்காக கொண்டுள்ளோம். இந்தியாவிலேயே முதல் முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லாருக்கும் எல்லாம் என அனைத்து துறைகளும், அனைத்து மாவட்ட சமூக வளர்ச்சிகள் என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் உழைத்து வருகிறோம். 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது தமிழ்நாட்டின் இலக்கோ, அதேபோல, விளையாட்டில் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story