வெறிநாய் கடித்து 28 ஆடுகள் சாவு
உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசை கிராமத்தில் வெறிநாய் கடித்து 28 ஆடுகள் இறந்தன.
பனைக்குளம்,
உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசை கிராமத்தில் வெறிநாய் கடித்து 28 ஆடுகள் இறந்தன.
மேய்ச்சல்
உச்சிப்புளி, இருமேனி, தாமரைக்குளம், நொச்சியூரணி, கடுக்காய் வலசை சுற்றியுள்ள பல கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல் இந்த கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகள் ஏராளமான கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.
உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் 30 ஆடுகளை வளர்த்து வருகின்றார். மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகளை தனது வீட்டின் அருகே உள்ள தோப்பில் அடைத்துள்ளார்.
விசாரணை
நேற்று காலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக தோப்பில் வந்து பார்த்தபோது 28 ஆடுகள் வெறிநாய் கடித்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உச்சிப்புளி காவல் நிலைய போலீசாரும் மற்றும் கால்நடை மருத்துவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் தெரு நாய் கடித்ததில் 20 ஆடுகள் இறந்த அடுத்த நாளே அருகே உள்ள மற்றொரு கிராமத்தில் மேலும் 28 ஆடுகள் வெறிநாய் கடித்து இறந்துள்ளது.
கோரிக்கை
எனவே உச்சிப்புளியை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றிதிரியும் வெறி நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.: