கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை


கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை
x

கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனையானது.

திருப்பூர்

கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனையானது.

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி சந்தையும் ஒன்று. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று கூடுகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்க சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச்சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். கடந்த 2 மாதங்களாக இப்பகுதியில் மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு தீவனம் கிடைத்ததால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வரவில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதன்படி நேற்று சந்தை கூடியது. இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ரூ.6,500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரத்தில் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. அவை மளமளவென்று விற்று தீர்ந்தன.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது "தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது" என்றார்.


Related Tags :
Next Story