வெறிநாய்கள் கடித்து 9 ஆடுகள் செத்தன


வெறிநாய்கள் கடித்து 9 ஆடுகள் செத்தன
x
திருப்பூர்


அவினாசி, சேவூர் பகுதியில் ெவறி நாய்கள் கடித்து 9 ஆடுகள் செத்தன.

வெறிநாய்கள் கடித்தன

அவினாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சி மாரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 51) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை ஆடு மற்றும் அதன் குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சுற்றிதிரிந்த 5 வெறிநாய்கள் ஆட்டையும் அதன் குட்டியையும் கடித்து குதறியது.

இதில் படுகாயமடைந்த 2 ஆடுகள் வலி தாங்கமுடியாமல் கத்தின. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தபோது அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. நாய்களால் தாக்கப்பட்ட ஆடுகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக செத்தன. இதே போல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலியானது. எனவே வீதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

7 ஆடுகள் செத்தன

சேவூர் அருகே ராமியம்பாளையம் பகுதியில் புதிதாக வந்த 5 நாய்கள், அந்தபகுதியில் சுற்றித்திரிந்தன. அப்போது அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை துரத்தி கடித்தது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 4 ஆடுகள் பலத்த காயமடைந்தன. இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,நாய்கள் தாக்கிதன் காரணமாக ராமியம்பாளையத்தைச்சேர்ந்த பங்களா தோட்டம் சுப்பிரமணி, மேற்கு தோட்டம் நாகராஜ், மனோஜ், ராக்கியண்ணன் ஆகியோரது ஆடுகள் பலியானது. எனவே வீதியில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றன


Next Story