ஆடு வளர்ப்பு பயிற்சி


ஆடு வளர்ப்பு பயிற்சி
x

வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஆடு வளர்ப்பு பயிற்சி நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் திருவாரூர் மாவட்டம் ஆனை வடபாதி கிராமத்தில் விஞ்ஞான ரீதியில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை டாக்டர் சபாபதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-இயற்கை முறையில் வளர்ப்பதற்கு மிக சிறந்த வெள்ளாட்டு இனங்கள் கன்னிஆடு, கொடிஆடு மற்றும் சேலம் கருப்பு ஆடு ஆகும். கருப்பு வங்காள இனங்கள் 3 அல்லது 4 குட்டிகளை ஒரே நேரத்தில் ஈணும் தன்மையுடையது. இந்த ஆடுகள் 6 மாத காலத்துக்கு ஒரு முறை ஈணும் தன்மையுைடயது. கொட்டில் முறையில் வளர்ப்பதற்கு தலைச்சேரி, ஜமுனாபாரி மற்றும் போயர் கலப்பு வெள்ளாடுகள் உகந்தவை. ஆடுகளை பி. பி. ஆர்., துள்ளுமாரி மற்றும் நீல நாக்கு நோய்கள் அடிக்கடி தாக்குவதால் இறந்துவிடுகின்றன. இதை தவிர்க்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். மேலும் திருவாரூர் நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இயற்கையின் சீற்றத்தாலும் மிகுந்த மழை பொழிவாலும் பல ஆடுகள் இறந்து விடுகின்றன. இதற்கு நல்ல கொட்டகை அமைத்து சரியான உணவு ஊட்டம் அளித்தால் இறப்பை தவிர்க்கலாம் என கூறினார். முடிவில் பண்ணையாளர் மனோஜ் பாபு நன்றி கூறினார்.


Next Story