ஆடு திருட முயன்ற வாலிபர் கைது
மணல்மேடு அருகே ஆடு திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மணல்மேடு;
மணல்மேடு அடுத்த சீப்புலியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ரவி(வயது58) விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் எதிரே உள்ள கொட்டகையில் கட்டியிருந்த ஆடுகள் சத்தம் எழுப்பின. இதனால் தனது தம்பி செல்வராஜ் என்பவருடன் எழுந்து சென்று ஆடுகளை பார்த்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 போ் ஆடுகளை திருடி செல்ல முயன்றனா். அவர்களை மடக்கி பிடிக்க முன்ற போது கிடாத்தலைமேடு வடக்குத்தெருவைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் சந்துரு (வயது 23) என்பர் மட்டும் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பிஓடி விட்டனர். இதுகுறித்து மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிடிபட்ட சந்துருவை கைது செய்தனர். மேலும். ஆடு திருட பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தாடர்பாக தப்பி ஓடிய கிடாத்தலைமேடு வடக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சூர்யா, காளியை செர்ந்த சேட்டு மகன் நிசார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.