செம்மறி ஆடுகள் திருட்டு
கருப்பூர் அருகே செம்மறி ஆடுகள் திருட்டு போனது.
சேலம்
கருப்பூர்
கருப்பூர் அருகே உள்ள உப்பு கிணறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், போலீசாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அங்கிருந்து இருள் சூழ்ந்த பகுதிக்குள் தப்பி ஓடி தலைமறைவானார். போலீசார் மோட்டார் சைக்கிள் அருகே சென்றபோது, அந்த மர்ம நபர் 2 செம்மறி ஆடுகளை திருடி வந்தது தெரிந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், ஆடுகளை போலீஸ் நிலையத்தில் கட்டி வைத்தனர். மேலும் ஆடுகள் எங்கே திருடப்பட்டன?, தப்பி ஓடிய மர்ம நபர் யார்? என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story