ஆடு திருட்டு; போலீசார் விசாரணை
ஆடு திருட்டு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
கீரமங்கலம்:
கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடுகள் திருட்டு தொடர்ந்து கொண்டே உள்ளது. அதேபோல பனங்குளம் வடக்கு கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமுத்து மகன் சிவக்குமார் (வயது 40) என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அப்போது ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களை ஒரு மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றும் அந்த காரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story