ஆடுகளை திருடிய வாலிபர் கைது


ஆடுகளை திருடிய வாலிபர் கைது
x
திருப்பூர்

காங்கயம்:

காங்கயம் பகுதியில் ஆடுகள் திருட்டு போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இந்த நிலையில் காங்கயம் போலீசார் காங்கயம் பகுதியில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் காங்கயம் பகுதியில் ஆடுகளை திருடியவர் என்பதும், அவர் திருப்பூர், பலவஞ்சிபாளையம், பெரியார் நகரைச்சேர்ந்த சிவா (வயது 23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காங்கயம் போலீசார், காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.


Next Story